மலைகிராமங்களில் வீடு வீடாக கொரோனோ தடுப்பூசி போடும் பணி தீவிரம்

பொம்மிடி அடுத்த முத்தம்பட்டி மலை கிராம பகுதிகளில் மக்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் நடமாடும் சுகாதார துறையினர்
தர்மபுரி மாவட்ட மலைகிராமங்களில் வீடு வீடாக கொரோனோ தடுப்பூசி போடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் கௌரிசங்கர் தலைமையில் பையர்நத்தம், சித்தேரி, வத்தல்மலை, முத்தம்பட்டி, மூக்காரெட்டிபட்டி, காளிப்பேட்டை ,பொம்மிடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட கிராம பகுதிகளில் கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முத்தம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வத்தல்மலை, மலை கிராமங்கள் மற்றும் ராமதாஸ் தண்டா, கோம்பை வேப்பமரத்தூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கிராம சுகாதார செவிலியர் ராஜலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், உதவியாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினர். இதில் மலை கிராமங்களில் இருந்து மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட முடியாத வயதான பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu