தர்மபுரி அருகே ரெட் ஏரியில் அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ஆய்வு

தர்மபுரி அருகே ரெட் ஏரியை ஆய்வு செய்த, அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிக்கரை ஊராட்சி, ரெட் ஏரியில் உள்ள கழிவுகளை அகற்றவும், ஏரியில் உள்ள சீமக்கருவேலம் மரத்தை அகற்றியும், மற்றும் தூர்வாரவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி, அப்பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தர்மபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் எம்.செல்வம், ஊராட்சி மன்றத்தலைவர் எஸ். காஞ்சனா சங்கர், ஊராட்சி மன்றத்தலைவர் ஆறுமுகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, கூட்டுறவு சங்க துணை தலைவர் வெற்றிவேல், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu