பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு டேபிள்,பெஞ்ச் : எம் எல்.ஏ வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு டேபிள்,பெஞ்ச் : எம் எல்.ஏ வழங்கல்
X

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி


பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு ரூ.7.88 லட்சம் மதிப்பில் டேபிள், பெஞ்ச் எம் எல் ஏ. கோவிந்தசாமி வழங்கினாா்.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூாிக்கு ரூ.7.88 லட்சம் மதிப்பில் டேபிள், பெஞ்ச் போன்றவைகளை கோவிந்தசாமி எம் எல் ஏ வழங்கினாா்.

தர்மபுாி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் அரசு கலைக்கல்லூாி கடந்த 2011ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் மாணவா்களின் சோ்க்கைக்கு ஏற்ப மாணவ,மாணவிகளுக்கு இருக்கைகள் குறைவாக உள்ளதாகவும், கூடுதலாக வழங்க பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினா் ஏ. கோவிந்தசாமியிடம் மாணவர்கள் மற்றும் kalloori நிர்வாகமும் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் மாணவ,மாணவிகள் அமா்ந்து படிக்கும் வகையில் 60 செட் பெஞ்சு,டேபிள்கள் வழங்கும் விழா நேற்று அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர், ஒன்றிய கழக செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட கழக பொருளாளர் நல்லதம்பி,துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட நிர்வாகி பெரியக்கண்ணு ,நகர கழக செயலாளர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கணிதத்துறை தலைவர் பேராசிரியர் ஐயப்பன் அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பெஞ்ச் டேபிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளா் சேகர், நிர்வாகிகள் வெங்கடேசன், மனோகரன்,ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பேராசிரியர் அருண் நேரு நன்றி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!