பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனப் பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி அருகே விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்து மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் குறித்த ஒரு மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி வேளாண் விரிவாக்க மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை அலுவலர் செல்வம் துவக்கிவைத்தார். இப்பயிற்ச்சியில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை உதவி பொறியாளர் சண்முகப்பிரியா கலந்துகொண்டு சூரிய மின் மோட்டார் மானிய திட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இப்பயிற்ச்சியில் கோத்தாரி சொட்டு நீர்ப்பாசன அலுவலர் வேல்முருகன், நுண்ணீர் பாசனம் அமைக்க தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் அதன் பராமரிப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன், உதவி தொழில்நுட்ப மேலாளர் திருப்பதி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
future of ai in retail