பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு: கலெக்டர் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு: கலெக்டர் ஆய்வு
X

கோப்பு படம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளை, கலெக்டர் திவ்யதர்ஷினி ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், 18 வது வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கான தேர்தல் பணி முன்னேற்பாடு குறித்து , மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது வாக்குச்சாவடிகள் அமையும் இடம், வாக்கு எண்ணும் இடங்கள், எத்தனை சுற்று, பாதுகாப்பு முறைகள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது பி.டி.ஓக்கள் அருண் மொழி தேவன், அமரவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future education