கொங்கு வேளாளர் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தல்
கொங்கு மக்கள் முன்னணியின் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்ற போது.
கொங்கு வேளாளர் சமூகத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் கொங்கு மக்கள் முன்னணியின் ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு செய்து, விகிதாசார அடிப்படையில் கொங்கு வேளாளர் சமூகத்துக்கு என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலையை தமிழக அரசு நிறுவ வேண்டும். தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலை பாதுகாக்கப்பட்ட ஆன்மீக சுற்றுலா தலமாகவும், பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையை சுற்றுலா தலமாகவும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். கே.ஈச்சம்பாடி அணைக்கட்டுவில் இருந்து நீரேற்றும் திட்டத்தின் வழியாக மொரப்பூர், அரூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கொங்கு மக்கள் முன்னணியின் மாவட்ட செயலர் இரா.பிரபாகரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் ச.பிரேம்குமார், மாணவரணி மாவட்ட செயலர் ரா.அகரம் அஜித், பாப்பிரெட்டிப்பட்டி இளைஞரணி ஒன்றிய செயலர் வெற்றிச்செல்வன், நிர்வாகிகள் சுகனேஸ்வரன், தமிழ்வாணன், அருண் செல்வன், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu