தி.மு.க.வுக்கு அரசு ஊழியர்கள் வாக்கு சேகரித்ததாக அ‌.தி.மு.க. புகார்

தி.மு.க.வுக்கு அரசு ஊழியர்கள் வாக்கு சேகரித்ததாக அ‌.தி.மு.க. புகார்
X
வாக்குப்பதிவு மையத்தில் இருந்த உதய சூரியன் சின்னம்.
தர்மபுரியில் தி.மு.க.,வுக்கு அரசு ஊழியர்கள் வாக்கு சேகரித்ததாக அ‌.தி.மு.க. மீது புகார் செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் டவுன் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.இதில் 15 வது வார்டான விஜயநகரம் காட்டுகொட்டாய்,மஜித் தெருவை சேர்ந்த வாக்காளர்கள் அரசு தொடக்கப்பள்ளி யில் வாக்களித்தனர்.

இங்கு ஓட்டுசாவடியில் தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்கள் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னம் பொறித்த லேபிள் மேஜை மீது வைத்து ஓட்டு கேட்பதாக அ.தி.மு.க.வினர் பேரூராட்சி தேர்தல் அலுவலர் நாகராஜனிடம் புகார் தெரிவித்தனர்.இது குறித்து அவரிடம் கேட்டபோது தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.வாக்காளர் சின்னம் பொறித்த வை சுவற்றில் ஒட்டபட்டிருந்தது.அதை கிழித்து யாரோ டேபிள் மீது வைத்துள்ளனர்.யாரும் அவ்வாறு கேட்கவில்லை என்றார்.

Tags

Next Story
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர்  செந்தில் முருகன்!