பொம்மிடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது - போக்குவரத்து பாதிப்பு

பொம்மிடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது - போக்குவரத்து பாதிப்பு
X

தடம் புரண்டு நிற்கும் சரக்கு ரயில்.

தருமபுரி மாவட்டம்பொம்மிடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது; இதனால், பல மணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் ரயில் நிலையத்தில் இருந்து, காலை 8:45மணியளவில், 45 பெட்டிகளுடன் ஜோலார்பேட்டை க்கு சரக்கு ரயில் புறப்பட்டது. சரக்கு ரயிலை, டிரைவர் ராஜேஷ் குமார் ஓட்டிச்சென்றார். கார்டாக, அமித்குமார் இருந்தார். இந்த சரக்க்கூட்ஸ் ரயில் கோவை-சென்னை மார்க்கத்தில் லோகூர்- பொம்மிடியிடையே செல்லும் போது, இன்ஜினில் இருந்து 18 வது பெட்டியின் கப்ளிங் , அதில் போடப்படும் கம்பி உடைந்து விழுந்தது.

இதனால், எதிர்பாராத வகையில் சரக்கு ரயில் சக்கரம் தடம் புரண்டு நின்றது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு இன்ஜின் டிரைவர் தகவல் கொடுத்தார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஸ்ரீநிவாஸ், ரயில்வே கோட்ட இன்ஜினியர் ராஜநரசிம்மாச்சாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ரயில்வே ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, மெஷின் மூலம் தடம் புரண்ட பெட்டியின் சக்கரங்களை மீண்டும் தூக்கி தண்டவாளத்தில் வைத்தனர். பிற்பகல் 2 மணியளவில் தடம் புரண்ட பெட்டிகள், இன்ஜின் மூலம் இழுத்து செல்லப்பட்டன. இதனால் ஆறு மணிநேரமாக, கோவை -சென்னை மார்க்கத்தில் எந்த இரயிலும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்கு ரயில் பெட்டிகளை சரிவர பராமரிக்காத காரணத்தினால், கப்ளிங் கம்பி உடைந்து விழுந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!