வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக பட்டதாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி
X

பைல் படம்.

சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த ரேகடஅள்ளி கிராமத்தை சேர்ந்த கருணாநிதியின் மகன் காந்தி (34). பட்டதாரியான இவர் வேலை கிடைக்காததால் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவரிடம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நன்னடத்தை அலுவலர் வேலை வாங்கி தருவதாக சர்வதேச மக்கள் உரிமை கழக தலைவர் என அறிமுகமான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கவிதா இராமதாஸ் என்பவர் ரூ 15 லட்சம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் தரவில்லை. இதில் ஏமாற்றமடைந்த காந்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். சென்னை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்ட குற்றபிரிவு போலீசார் கவிதா ராமதாஸ், அவரது கணவர் வினோத் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil