அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளித்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர்.
தர்மபுரி மாாவட்டம், பூனையானூர் கிராமத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகைக்கு நிலைய அலுவலர் செல்வமணி தலைமை தாங்கினார்.
பூனையானூர் கிராமத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், தீ விபத்து சமயத்தில் ஆண் எவ்வாறு தீயை அணைப்பது மற்றும் தீ விபத்துக்கள் மீட்பு அழைப்புகளில் எவ்வாறு செயல்பட்டு உயிர்களையும், உடமைகளையும் காப்பாற்றுவது, கேஸ் சிலிண்டர் பற்றினால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வை மீட்பு பணியாளர்கள் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu