ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
வாணியாறு அணை உபரிநீர்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணையில் இருந்து உபரிநீர் கடந்த17 ந்தேதி திறக்கபட்டது. இந்த உபரிநீர் முதலில் பழைய ஆயக்கட்டான ஆலாபுரம்,ஓந்தியாம்பட்டி, தென்கரை கோட்டை,பறையப்பட்டி ஏரிகளுக்கு திறந்து விடப்படும். இதனால் இந்த பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
மெனசி, பூதநத்தம், தோழனூர், அம்மாபாளையம்,ஆலாபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் வசதி வழங்கும் ஆலாபுரம் ஏரியில் மீன் பிடி குத்தகை தாரர்களுக்கும் , அக்கிராம மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீன் பிடிக்காமல் இருந்தனர். ஆனால் தற்போது பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஏலம் எடுத்துள்ளதால்,ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் விட கூடாது என அதிகாரிகளை சரிகட்டியதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலாபுரம் ,ஓந்தியாம்பட்டி, தென்கரை கோட்டை ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கவில்லை.
இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்வி குறியாக உள்ளது. இதனால் பறையப்பட்டி ஏரி நிரம்பி உபரிநீர் வீணாக ஆற்றில் செல்லுகின்ற நிலை உள்ளது.ஆகவே உடனடியாக ஆலாபுரம் ஏரி உள்ளிட்ட மூன்று ஏரிகளுக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu