வாணியாறு உபரிநீர் வருமா? மெனசி பகுதி விவசாயிகள் ஏக்கம்

வாணியாறு உபரிநீர் வருமா?  மெனசி பகுதி விவசாயிகள் ஏக்கம்
X

புதர்மண்டிக் கிடக்கும் வாய்க்கால். 

வாணியாறு உபரிநீர் திறந்துவிட, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மெணசி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள முள்ளிக்காடு சேர்வராயன் மலை அடிவாரத்தில், வாணியாறு அணை 1984, ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 65 அடி உயரமாகும். இதன் பாசன பரப்பு சுமார் 11000 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 20க்கும் மேற்பட்ட ஏரிகள் பயன் பெறுகிறது. இடது புறம் மற்றும் வலதுபுறம் கால்வாய் வழியாக விவசாய நிலங்களுக்கு நேரடியாக பாசனத்திற்கு நீர் சென்று வருகிறது.

இடதுபுறம் கால்வாய், வெங்கடசமுத்திரம், மோலயானூர், தேவராஜபாளையம், விழுதப்பட்டி, மெனசி, புதநத்தம், ஆலாபுரம், ஜம்மனஹள்ளின் வழியாக செல்கிறது. இந்த இடதுபுற கால்வாயில் வழுதப்பட்டி அருகே அப்புகள் மலையடிவாரத்தில், ஒரு கால்வாய் பிரிந்து செல்கிறது. இதில் அணை கட்டியதில் இருந்து இதுவரை மூன்று முறை மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. இந்தபகுதி விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த பகுதியில் அதிகமாக மானாவாரிபயிர்களை செய்து வருகிறார்கள்.

இந்த கால்வாயில் தண்ணீர் வந்தால் சுமார் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பயன்பெறும். ஆனால் இந்தக் கால்வாய் தூர்வாரப்படாமல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பலமுறை அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு கொடுத்தும், கண்டு கொள்ளவில்லை. கடந்த வருடம் கால்வாய்கள் தூர் வருவதற்காக சுமார் 16 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கால்வாயை திரும்பி பார்க்கவில்லை. இந்த கால்வாய் புதர்மண்டி, இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது. அனைத்து பகுதிகளிலும் தற்போது உபரி நீர் சென்று வருகிறது. ஆனால் இந்த கால்வாயில் தண்ணீர் வரவில்லை. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future