தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது
X

விஜயன்.

தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், அடுத்த செம்பியானூர், காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, வயது 74. இவரது வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் 17 ந்தேதி மர்ம நபர்கள் புகுந்து அவரையும் அவரது மனைவி யையும் கட்டிப்போட்டு 25 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது.

இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர். இதுமட்டுமல்லாமல் அரூர் போலீஸ் தனிப்படையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் அரூர் போலீஸ் சப் டிவிஷன் துணை சூப்பிரண்டு பெனாசீர் பாத்திமா மேற்பார்வையில் அரூர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் வட்டத்தை சேர்ந்த விஜயன் வயது 42 (எ) நீடூர் விஜயனை , காரைக்காலில் சுற்றி வளைத்து பிடித்தனர். பின் பொம்மிடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கைது செய்தனர்.

பின்னர் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அரூர் கிளை சிறையில் அடைத்தனர். இவன் மீது தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், நில மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டீம் ஆக வைத்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இவர் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தால் அதை செயல்படுத்த இவருக்குக் கீழ் பலர் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!