மாதம் ரூ.1,500 : பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் உறுதி

மாதம்  ரூ.1,500 : பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் உறுதி
X
பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் குடும்பத்திற்கு மாதம் ரூ.1,500 கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதிமுக, திமுக, நாம் தமிழ் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சை வேட்பாளர் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கோவிந்தசாமி தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட திப்பிரெட்டி அள்ளி, சொரக்காப்பட்டி கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பொதுமக்களிடம் அவர் பேசும் போது, 'அதிமுக ஆட்சி அமைந்தால், குடும்பத்திற்கு மாதம் ரூ.1,500 மற்றும் வருடத்திற்கு 6 சிலிண்டரும், இலவச கேபிள் இணைப்பும் கிடைக்கும்' என்று பேசினார்.

அப்போது பாமக தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, அதிமுக தருமபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் நீலாபுரம் செல்வம், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், பாமக, ஒன்றிய செயலாளர் தம்பிதுரை மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!