பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் நகர் புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாவட்ட முழுவதும், 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம், கடத்தூர் ஆகிய மூன்று பேரூராட்சிகளுக்கும் , 9 குழு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் கொண்ட ஒரு குழு காலை 6மணி முதல் பிற்பகல் 2மணி வரையும், 2மணி முதல் இரவு 10மணி வரையும், இரவு 10 மணிமுதல் காலை 6மணி வரையும், தொடர்ந்து கடந்த, 28ந் தேதியில் இருந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.

அனைத்தும் வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பணமோ, பரிசு பொருட்களோ கைப்பற்றபடவில்லை.

Tags

Next Story
future of ai in retail