கடத்தூர் அருகே பைக் மோதி டிரைவர் பலி

கடத்தூர் அருகே பைக் மோதி டிரைவர் பலி
X
கடத்தூர் அருகே பைக் மோதி டிரைவர் பலி

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் அன்பு இவரது மகன் பிரபாகரன் , 33. இவர் நேற்று முன்தினம் மாலை தாளநத்தம்-பொம்மிடிரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.அவரை உறவினர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு சேலம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்படி கடத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!