தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் லதா வெற்றி

தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் லதா வெற்றி
X

தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் லதாவுக்கு தேர்தல் அலுவலர் பாபு அதற்கான சான்றிதழ் வழங்கினார்.

தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் லதா 5911 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கடந்த 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை எட்டு மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது.

எட்டு மேசைகளில் 12 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட லதா தாமரைச்செல்வன் 18,780 வாக்குகளை பெற்றார். இவரு எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட கண்ணன் 12869 வாக்குகளைப் பெற்றார். இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளரை விட, திமுக வேட்பாளர் லதா தாமரைச்செல்வன் 5911 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார். இதில் 556 வாக்குகள் செல்லாத வாக்குகள் பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட லதா தாமரைச்செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்பொழுது லாதாவுடன், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்ளிட்ட திமுகவினர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற லதா தாமரைச்செல்வனுக்கு வாழ்த்து தெரிவித்து, மாலை அணிவித்து பட்டாசு வெடித்தும் திமுகவினர் வெற்றியைக் கொண்டாடினார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil