மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தல்: கட்சியினர் இறுதி கட்ட பிரச்சாரம்

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தல்: கட்சியினர் இறுதி கட்ட பிரச்சாரம்
X

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய 18வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 18-வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இடைத்தேர்தல் நாளை மறுநாள் 9 ந்தேதி நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க., சுயேட்சை வேட்பாளர்கள் என 8 பேர் போட்டியிடுகின்றனர்.

அ.ம.மு.க., வேட்பாளர் ஜெயராமன் அ.தி.மு.க.,வில் சேர்ந்ததால் அக்கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. மற்ற கட்சியினர் பூத் வாரியாக மாவட்டத்தில் உள்ள தி.மு.க., அ.தி.மு.க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பா.ம.க., தலைவர் எம்.எல்.ஏ., ஜி.கே..மணி, தர்மபுரி எம். எல். ஏ., வெங்கடேஸ்வரன், முன்னாள் அமைச்சர்கள் அன்பழகன், எம்.எல்.ஏ ., பழனியப்பன், தர்மபுரி எம்.பி, செந்தில்குமார், தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுறுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!