தருமபுரி: கார் மோதியதில் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி உயிரிழப்பு

தருமபுரி: கார் மோதியதில் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி உயிரிழப்பு
X

தருமபுரி அருகே, கார் மோதியதில் நொறுங்கிக் கிடக்கும் இருசக்கர வாகனம்.

தருமபுரி அருகே, கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.

தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் வழியில் உள்ள சோளக்கொட்டாயை சேர்ந்தவர் பழனி 40; கூலித்தொழிலாளி. அவரது மனைவி மஞ்சுளா 30, இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். தருமபுரி அருகே உள்ள நடுப்பட்டியில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில், தம்பதி இருவரும் தங்களது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அரூரில் இருந்து தருமபுரியை நோக்கி வந்த கார், தம்பதியின் டூ வீலர் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர், தப்பியோடி விட்டார். மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோளக்கொட்டாயில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#இன்ஸ்டன்யூஸ் #தருமபுரி #சாலைவிபத்து #இருவர்பலி #tamilnadu #Instanews #Twowheeler #car #death #husband #wife #died #accident #police

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!