கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு.

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு.
X

கிணற்றில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர்

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே குரூபரஅள்ளியில் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடத்தூர் அருகே உள்ளது குரூபரஅள்ளி என்ற கிராமம். அந்த கிராமத்தில் வசித்து வருபவர் வெண்ணிலா முருகன். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அருகே மாட்டை மேய்க்க விட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பசுமாடு சுமார் 75 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இது பற்றி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் பசுமாட்டை உயிருடன் மீட்டனர். பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டதற்கு பொதுமக்கள் தீயணைப்புத்துணையினருக்கு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!