பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் கொரோனோ விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் கொரோனோ விழிப்புணர்வு
X

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற கொரோனோ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கைகழுவி பொதுமக்கள்.

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் செயல் அலுவலர் ஆயிஷா தலைமையில் கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி பாப்பிரெட்டிபட்டி பேருந்து நிலையத்தில் கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கை கழுவும் முறைகள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, வட்டாட்சியர் பார்வதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, முரளி, சுகாதார ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன், தன்னார்வலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!