பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கலந்தாய்வு கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கலந்தாய்வு கூட்டம்
X

பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்

கொடிக் கம்பம் நடுதல், பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்த ஆலோசனை செய்யப்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரியுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் ஆய்வாளர் லதா தலைமையில், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கொடிக் கம்பம் நடுதல்,பிளக்ஸ் பேனர் , விளம்பர பேனர்கள் வைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், காவல் ஆய்வாளர் லதா பேசும் போது: அனுமதி இன்றி வைக்க பட்ட பதாகைகளை தாமாக முன்வந்து அகற்றி கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் மாவட்ட கலெக்டர் அல்லது கோட்டாட்சியர் அனுமதி பெற்றபிறகே பிளக்ஸ் பேனர்களை வைக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!