பாப்பிரெட்டிப்பட்டி அருகே மினி லாரி-பைக் மோதி கல்லூரி மாணவன் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மினி லாரி-பைக் மோதி  கல்லூரி மாணவன் சாவு
X

பைல் படம்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மினி லாரி-பைக் மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தொம்பகலானூரைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் மாரியப்பன்,வயது 21. இவர் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இன்று மாலை லிருந்து பாப்பிரெட்டிப்பட்டி க்கு சொந்த வேலையாக தனது பைக்கில் சென்றார்.

தனியார் கிழங்கு மில் அருகே சென்றபோது, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த டாட்டா ஏசி மினிடோர் மோதியதில் பலத்த காயமடைந்து மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!