கடத்தூர் ஒன்றியத்தில் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க கலெக்டர் உத்தரவு

கடத்தூர் ஒன்றியத்தில் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க கலெக்டர் உத்தரவு
X

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இன்றுமாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடத்தூர் ஒன்றியத்தில்அனைத்து பணிகளையும் விரைவாகவும் தரமாகவும் முடித்து தருமாறு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இன்றுமாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குருபரஅள்ளி முதல் கொட்டாபுளியனூர் வரைரூ. 24, இலட்சத்து ஏழாயிரம் மதிப்பில் நடைபெறும் சாலைப்பணியினையும், குருபரஅள்ளி பஞ்.ல் கொட்டாபுளியனூர் முதல் துரிஞ்சிப்பட்டி வரை ரூ.14,இலட்சத்து 87, ஆயிரம் மதிப்பில் நடைபெறும் சாலைப்பணியினையும் கலெக்டர் பார்வையிட்டார்.

தொடர்ந்து, இராமியணஅள்ளி பஞ்சாயத்தில் மேக்கல்நாய்க்கனப்பட்டி முதல் பூதநத்தம் சாலை வரை ரூ.ஒரு கோடியே 73 இலட்சத்து 60,ஆயிரம் மதிப்பில் நடைபெறும் சாலைப்பணியினையும், இராமியணஅள்ளி ஊராட்சியில் கனிம வளம் திட்டத்தின் கீழ் ரூ.9, இலட்சத்து 99, ஆயிரம் மதிப்பில் திறந்தவெளிக் கிணறு ஆழப்படுத்துதல் பணியினையும், ரூபாய் மூன்று கோடியே 9 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அனைத்து பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் குறிபிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள் ராமசந்திரன், ஜெகதிஷ் , உதவிப் பொறியாளர்கள் முருகேசன், அரவிந்த்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கே.ரங்கநாதன், வெ.ப.ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!