பொம்மிடி: பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது

பொம்மிடி: பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது
X
பொம்மிடி அருகே பெண்ணிடம் செயின் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பையர்நத்தம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள்,50. இவருக்கு அறிவழகன், அருண்பிரசாத் என்ற, 2 மகன்களும், அர்ச்சனா மகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் பி. பள்ளிப்பட்டியில் நடைபெற்ற கெபி திருவிழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது, பொம்மிடி-பாப்பிரெட்டிப்பட்டி ரோட்டில் நடந்து வீட்டுக்கு செல்லும்போது, ஹீரோ ஹோண்டா ஸ்பிளன்டர் பைக்கில் வந்த, 3 பேர் பழனியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலி செயினை பறித்துச் சென்றனர்.

பொம்மிடி போலீசில் கொடுத்த புகாரின்படி ,பொம்மிடி வடசந்தையூர் பகுதியை சேர்ந்த ஷர்பர்தீன்,28, உமர்,47, உஸ்மான்,37, ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து, ஒரு பவுன் தங்க தாலி செயினை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai marketing future