பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிசிடிவி கேமரா, கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிசிடிவி கேமரா, கொரோனா குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

சிசிடிவி கேமரா.

ஏ.பள்ளிப்பட்டி பகுதியில் குற்றங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட அதிகாரப்பட்டி, பள்ளிபட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெடீடிப்பட்டி, இருளப்பட்டி கிராம பகுதிகளில் அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில் நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டது.

பொது மக்கள் தங்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் வைக்க வேண்டும். சிசிடிவி கேமரா மூன்றாவது கண் போன்றது என்றும், அவைகளை பொருத்துவதால் குற்றங்களை தடுக்கலாம் எனவும், கொரோனோ குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!