பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார்-லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார்-லாரி மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு
X
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பாப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனி மகன் வேடியப்பன் (42). இவரது குடும்பத்தினர் புதியதாக ஒரு கார் வாங்கியுள்ளனர். இதையடுத்து, தமது குடும்பத்தினருடன் சேலம் அருகே தாதகாப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர். பிறகு, கோயிலில் வழிபாடு முடிந்த பிறகு சேலம்-அரூர் தேசிய நெடுஞ்சாலையில், பாப்பம்பாடி நோக்கி காரில் வந்துள்ளனர்.

அப்போது, அதிகாரப்பட்டி ஏரிக்கரை அருகே, அரூரில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற மின்சார வாரியத்துக்கு சொந்தமான லாரியானது, எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது. இதில் காரில் பயணம் செய்த பாப்பம்பாடியைச் சேர்ந்த பழனி மகன் வேடியப்பன் (42) அவரது உறவினர் பெருமாள் மகன் சக்திவேல் (45) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

மேலும், காரில் இருந்த வேடியப்பனின் உறவினர்கள் பூங்கொடி (34), கலா (36), கனகா (38) மற்றும் சிறுவர்கள் மூவர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் 108 மூலம் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future