மூன்று டவுன் பஞ்சாயத்துகளில் வேட்பு மனுக்கள் பெறுவதில் வேட்பாளர்கள் ஆர்வம்

மூன்று டவுன் பஞ்சாயத்துகளில்  வேட்பு மனுக்கள் பெறுவதில் வேட்பாளர்கள் ஆர்வம்
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்ட மூன்று டவுன் பஞ்சாயத்துகளில் வேட்பு மனுக்கள் பெறுவதில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆகிய டவுன் பஞ்,களில் தலா, 15 வார்டுகள் என, 45 வார்டுகள் உள்ளன.

நேற்று முதல் வேட்புமனுத் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து நேற்று வேட்புமனு விற்பனை பேரூராட்சியில் மும்முரமாக நடைபெற்றது. எட்டு பக்கம் கொண்ட வேட்புமனு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனை தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டியில்,18 மனுக்களும், பொ.மல்லாபுரத்தில், 19 மனுக்களும், கடத்தூரில், 15 மனுக்கள் என 52 மனுக்கள் விற்பனையாகியுள்ளது.

நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, மூன்று டவுன் பஞ்சாயத்துகளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. வேட்பு மனுக்கள் மட்டும் வாங்கிச் சென்றனர். அரசியல் கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. ஆகவே வரும் தை அமாவாசை, 31ல் வருவதால் அன்று அதிகளவில் நடைபெற வாய்ப்பு உள்ளது என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!