பாப்பிரெட்டிப்பட்டி: உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக ஆலோசனை

பாப்பிரெட்டிப்பட்டி: உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக ஆலோசனை
X

இருளப்பட்டியில் நடந்த தி.மு.க ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பேசினார். 

உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக, பாப்பிரெட்டிப்பட்டி திமுகவினர் ஆலோசனை நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் இருளப்பட்டி கலைஞர் அரங்கத்தில், தி.மு.க., மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில், திமுக வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வரும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், அண்ணாதுரை பிறந்தநாள் கொண்டாட்டம், கட்சி வளர்ச்சிப் பணி குறித்து ஆலோசணை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தனேந்திரன், நகர செயலாளர் ஜெயசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!