இரவு நேரத்தில் பஸ் சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

இரவு நேரத்தில் பஸ் சேவை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி
X

கோப்பு படம் 

பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து மெனசி, பூதநத்தம், மோளையானூர், மருக்காலம்பட்டி, தென்கரைக்கோட்டை கள்ளியூர், கோபாலபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக தர்மபுாிக்கும், அரூருக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் நான்கு தனியார் பஸ்களும், மூன்று டவுன் பஸ்களும், ஒரு மப்சல் பஸ்சும் சென்று வருகிறது.இவைகள் அனைத்தும் பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகிறது.

இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பிற வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் பகல் நேரங்களில் மட்டுமே பஸ்ஸில் செல்லும் நிலை உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்தோ அல்லது அரூரில் இருந்தோ எந்தவிதமான பஸ்சும் இந்த கிராமங்களில் வழியாக வருவதில்லை.

மாலை ஆறு மணியோடு அனைத்து பஸ்களும் நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே இரவு நேரங்களில் இந்த பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil