பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் தம்பி கொலை: அண்ணன் உள்பட 3 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் தம்பி கொலை: அண்ணன் உள்பட 3 பேர் கைது
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் தம்பி கொலை. அண்ணன் உள்பட 3 பேர் கைது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி சேர்ந்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவருக்கு செல்லியம்மாள், ராணி என இரண்டு மனைவிகள். இவர்களில் முதல் மனைவி செல்லியம்மாளுக்கு வீரமணி வயது 69, கனகா வயது 60 . என இரண்டு பேரும், இரண்டாம் மனைவி ராணிக்கு, மணி வயது 62 என்ற மகனும், ருக்கு, மலர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதில் பெருமாள் இறந்த பிறகு, ராணி நீதிமன்றம் மூலம் வழக்கு தொடுத்து அவர்களுக்கிருந்த, 20 ஏக்கர் விவசாய நிலம் மொத்த சொத்தில், 4 ஏக்கர் நிலத்தை ராணி பெற்றுள்ளார். மீதம் உள்ள, 16 ஏக்கர் விவசாய நிலம் பெருமாள் பெயரில் உள்ளது. இதில் மணி மற்றும் வீரமணி ஆகிய இருவரும் அதில் விவசாயம் செய்து வருகின்றனர். முழுமையாக தனியாக யாருக்கும் இன்னும் கிறையம் ஆகவில்லை. இதில் நேற்று மாலை 5:30 மணியளவில் மணிக்கு சொந்தமான நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வீரமணி மற்றும் அவரது மகன்கள் பிரபாகரன் வயது 47, இளங்கோ வயது 42 ஆகியோர் உனக்கு விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளது. ஆகவே பிரச்சினை முடிந்த பிறகு உழவு செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது‌. இதில் மணி தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புகாரின்படி வீரமணி, பிரபாகரன், இளங்கோ ஆகிய மூவரையும் பள்ளிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு