ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு

ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10 வரை தடை நீடிப்பு
X

ஆலாபுரம் ஏரி

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் மீன் பிடிக்க அக்டோபர் 10ம் தேதி வரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. .

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி, பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது. இந்த ஏரியின் மீன் பாசி குத்தகையை, 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு, மொரப்பூர் மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அடிப்படையில் குத்தகை தொகை நிர்ணயம் செய்து வழங்கப்பட்டது.

இதனை, மீனவ சங்க உறுப்பினர்கள் ராணி, உள்ளிட்ட 6 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் ஆலாபுரம், மெணசி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கும், மீன் பாசி குத்தகை தாரர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, கடந்த ஜுலை 30ந்தேதி இருந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இரு தரப்பினருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்படாததால், நேற்று மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மண்டபத்தில், அரூர் கோட்டாட்சியர் முத்தையன், தர்மபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாமலை, தாசில்தார் பார்வதி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது. இதில் சுமூகமான முடிவு ஏற்படாததால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, அக்டோபர் 10ந்தேதி வரை மீன் பிடிக்க வருவாய் துறையினர் தடை விதித்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!