இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: உயிர் பயத்தில் இருளர் இன மக்கள்

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: உயிர் பயத்தில் இருளர் இன மக்கள்
X

சுவர்கள் மழைநீரில் ஊறி மேற்கூரைகள் விழுந்துள்ள தொகுப்பு வீடுகள்

இருளப்பட்டியில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் உயிர் பயத்தில் இருளர் இன மக்கள்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட இருளப்பட்டி ஊராட்சியில் இருளப்பட்டி, நாகலூர் காமராஜர் நகர், இந்திரா நகர் , பீரங்கி நகர் என ஐந்து கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இதில் இந்திராநகரில் 500,க்கும் மேற்பட்ட இருளர் இன பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30, ஆண்டுகளுக்கு முன்பு அரசால் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக மழையால் இந்த வீடுகளின் சுவர்கள் மழைநீரில் ஊறி மேற்கூரைகள் விழுந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை வரும்போது வீட்டுக்குள் மக்களால் படுக்க முடிவதில்லை. எந்நேரமும் விழுந்து விடும் நிலையில் உயிர் பயத்தில் இந்த மக்கள் மழைக் காலத்தில் படுக்க முடியமால் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கடந்த பத்து ஆண்டுகளாக இந்த வீடுகளை புதுப்பித்தும், இடிந்து விழுந்த வீடுகளுக்கு புதிய வீடுகளும் கட்டிக் கொடுக்க கேட்டு கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை, என அம்மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்போது மழைக்காலம் என்பதால் அருகில் வயல் வெளிகள், குட்டைகளில் தேங்கும் தண்ணீரால் தண்ணீர் ஜவுக்கு எடுத்துக்கொண்டு ஊருக்குள் வந்து விடுகிறது. இதனால் வீடுகள் முழுவதும் தண்ணீர் தேங்கி மக்கள் குடியிருக்க இயலாத ஒரு நிலையில் உள்ளனர்.

ஆகவே அரசு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு இம்மக்களுக்கு முழுமையாகவும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என இருளர் இன மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!