அதிமுகவினர் பேனர் எரிப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் திமுகவினா் மீது எம்எல்ஏ புகாா்

அதிமுகவினர் பேனர் எரிப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் திமுகவினா் மீது எம்எல்ஏ புகாா்
X

தீவைத்து எரிக்கப்பட்ட அதிமுகவினரின் பேனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிமுகவின் பேனரை எரித்த திமுகவினா் மீது எஸ்.பி.அலுவலகத்தில் எம்எல்ஏ கோவிந்தசாமி புகாரளித்தார்.

முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான மறைந்த டாக்டா் எம்ஜிஆா் அவா்களின் 105வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என எம்ஜிஆரின் திருவுருவ சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள நடுர் கிராமத்தில் அதிமுக தொண்டர்கள் மூலம் எம்ஜிஆரின் பேனர்கள் வைக்கப்பட்டு நேற்று மரியாதை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை பேனர் கிழிக்கப்பட்டு அதனை தீ வைத்துள்ளனா். இதனைக் கண்டிக்கும் விதமாக பேனரை எரித்த திமுகவினரை கைது செய்ய வேண்டும் என பாப்பிரெட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் அலுவலகத்தின் வெளியே வந்த அவர் கூறும்போது, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது என குற்றம் சாட்டினாா்.

Tags

Next Story