/* */

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து மறியல்: 47 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து மறியல்: 47 பேர் கைது
X

பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்டில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் வஞ்சி தலைமையில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர் நல நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்,பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விடுவதை நிறுத்த வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தகுதிகேற்ற வேலையை உருவாக்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலைகளை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என கோஷயிட்டு மறியல் செய்தனர்.

இதில் 43 ஆண்கள், நான்கு பெண்கள் உள்ளிட்ட 47 பேரை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

Updated On: 27 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  2. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  3. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  4. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  5. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  6. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  7. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  8. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  9. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!