தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா

தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா
X

தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி பத்மாவதி பார்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாடப்பட்டது.

தர்மபுரி பெரியாம்பட்டியில் உள்ள பத்மாவதி பார்மசி கல்லூரியில், உலக மருந்தாளுநர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சப்தகிரி, பத்மாவதி, பீ.ஜீ. கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.ஜி.சேகர் தலைமை தாங்கினார். கல்லூரி துணை தலைவர் எம்..ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் எம். புருஷோத்தமன் வரவேற்றுப் பேசினார்.

விழாவையொட்டி கல்லூரி தலைவர் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கினார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி இயக்குனர் டாக்டர் ஏ.கமல் நன்றி கூறினார்.

Tags

Next Story
ai marketing future