புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்

புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
X

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் 

பாலக்கோடு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் எதிர்ப்பினால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. மூடப்பட்ட அந்த கடையை மீண்டும் அதே இடத்தில் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த பகுதிசை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், இந்த இடத்தில் டாஸ்மாக் கடையை திறந்தால் வெளியூர் பகுதியில் இருந்து ஏராளமானோர் மது அருந்த வருவார்கள். இதனால் கிராமத்து பெண்கள் மற்றும் மாணவிகள் வெளியே சென்று வருவதற்கு அச்சுறுத்தல் ஏற்படும். அதிகமான வாகன போக்குவரத்து ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது தவிர அன்றாடம் தினக்கூலிக்கு செல்லும் ஆண்கள் சம்பள பணத்தை குடித்து தீர்த்து விடுவார்கள். ஊரில் உள்ள வாலிபர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மது பழக்கத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது

மேலும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், அவர்களிடம் பேச்சுவர்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக என உறுதியளித்ததின் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..