பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட  பெண் கைது
X
பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் பெண் கைது

பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் பெண் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் வளர்மதி தலைமையில், உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவபெருமாள், அருள் மற்றும் தலைமை காவலர் செந்தில்குமார், பெண் தலைமை காவலர் கல்பனா ஆகியோர் வாகனசோதனை மேற்கொண்டனர்.

தருமபுரி புலிக்கரை பாலக்கோடு பகுதியில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ரைடு சென்றபோது பாலக்கோடு பனங்காடு சேர்ந்த முனியப்பன் மனைவி ராணி என்பவர் தலா 50 கிலோ எடையுள்ள 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியதற்காக கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!