அதிமுக ஐடி பிரிவு சார்பில் நலத்திட்ட உதவி: எம்எல்ஏ அன்பழகன் வழங்கல்
நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். அருகில் வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி பி சதீஷ் குமார் உள்ளிட்டோர்.
தர்மபுரி மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், கட்சியின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம், பாலக்கோடு தொகுதியில் உள்ள செக்கோடி, மேக்கலாம்பட்டி, அல்லியூர், ஜோதிஹள்ளி, தீர்த்தாரஹள்ளி, பாலக்கோடு நகரம் ஆகிய பகுதிகளில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அப்பகுதி தூய்மைப் பணியாளர்கள், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா , வேலூர் மண்டல செயலாளர் ஜனனி பி சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளருமான, பாலக்கோடு எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு, இனிப்புகள், அன்னதானம் வழங்கினார். தூய்மைப் பணியாளர்கள், முதியோர்கள், நலிவுற்றவர்கள் 500, பேருக்கு வேட்டி, சேலை, அரிசி, மளிகை பொருட்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருள், நோட்டுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன், தர்மபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பூக்கடை ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu