கோவை ஆயுதப்படை காவலரின் தன்னார்வ சமூக சேவை

கோவை ஆயுதப்படை காவலரின் தன்னார்வ சமூக சேவை
X

கோவை ஆயுதப்படை காவலர் பாபு ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார்.

ராணுவ பணியின்யின் போது இறந்த தமிழகத்தை சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் குடும்பங்களுக்கு கோவை ஆயுதப்படை காவலர் நிதி உதவி வழங்கினார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆயுத படையில் பணி புரியும் முதல்நிலை காவலர் பாபு .சமூக ஆா்வலரான இவா் ஏழை எளியோருக்கு உதவி செய்து வரும் நிலையில் காவல்துறை மற்றும் ராணுவத்தில் உயிா் இழந்தவா்களுக்கு நண்பா்கள் மற்றும் காவலா்களிடம் உதவும் கரங்கள் என்ற குழு அமைத்து அதன் மூலமாக சக காவலர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்கொடை பெற்று உதவி வருகிறாா்.

இந்நிலையில் இதேபோல் ரூபாய் ரெண்டு லட்சம் ரூபாயை நிதி திரட்டினார் .அவ்வாறு பெறப்பட்ட நிதியை நாட்டுக்காக பாடுபட்டு பணியின்போது இறந்த தருமபுாி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியை சோ்ந்த பூபதி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சோ்ந்த பிரகாஷ், ராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயை வழங்கினார் .

இதுவரை ராணுவ வீரா் அல்லது காவல்துறையினா் உயிா் இழந்தால் சம்பந்தப் பட்ட துறையினா் மட்டுமே நிதியை திரட்டி வழங்கி வந்த நிலையில் இதுவரை யாரும் இதுபோன்று செய்யாத ஒரு புது நிகழ்வை இவர் நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story