பாலக்கோடு அருகே குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து கிராம மக்கள் மறியல்

பாலக்கோடு அருகே குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து கிராம மக்கள் மறியல்
X

பாலக்கோடு அருகே காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

பாலக்கோடு அருகே குடிநீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஅள்ளி அடுத்த கும்மனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது நம்மாண்ட அள்ளி கிராமம். இங்கு குடிநீர் பிரச்சனை இருந்து வந்த நிலையில் பொதுமக்கள் குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து இன்று காலை காலி குடங்களுடன் பஞ்சப்பள்ளி ராயக்கோட்டை முக்கிய சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அவ்வழியாக வந்த சூளகிரியில் இருந்து மாரண்டஅள்ளி சென்ற பேருந்தை சிறைபிடித்து 100க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கும்மனூர் பஞ்சாயத்து நம்மாண்ட அள்ளி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். இந்த கிராமத்திற்கு தினமும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒகேனக்கல் குடிநீர் மற்றும் ஆள்துளை கிணறு மூலமாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு வார காலமாக பஞ்சாயத்து நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படவில்லை எனவும், இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது ஆழ்துளை கிணறு மின்மோட்டார் பழுதாகி உள்ளது அதை சரி செய்து பிறகுதான் தண்ணீர் விடப்படும் என பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒகேனக்கல் தண்ணீர் நம்மாண்ட அள்ளி பகுதி மேடாக இருப்பதால் தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏறுவதில்லை என பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தன போக்குடன் பதிலளிக்கிறது.

தினந்தோறும் தண்ணீரை விவசாய நிலத்திற்கும், தனியாருக்கும் விற்பனை செய்து வருவதாக பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஒரு வாரத்திற்கு மேல் பஞ்சாயத்து நிர்வாகம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீரின்றி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த பஞ்சப்பள்ளி காவல்துறையினர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தண்ணீர் வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு