பாலகோடு: பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

பாலகோடு: பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
X

பாலகோட்டில்,  லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட, கிராம நிர்வாக அலுவலர் செல்வம்

தருமபுரி மாவட்டம் பாலகோட்டில், பட்டா மாற்றம் செய்வதற்கு, ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜர்த்தலாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் மூர்த்தி 24. இவர் அப்பகுதியில், சில வருடங்களுக்கு முன்பு மூன்றரை சென்ட் நிலம் வாங்கினார். இந்த நிலத்தை பட்டா மாற்றம் செய்ய வேண்டி, ஜெர்தலாவ் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளார்.

ஜெர்தலாவ் கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பை, பி.செட்டிஹள்ளி கிராம நிர்வாக அலுவலர் செல்வம் வயது 53.அதை கூடுதலாக கவனித்து வந்தார். மூர்த்தி பட்டா மாற்றம் குறித்து வி.ஏ.ஓ விடம் கேட்டபோது, ரூ.3000 இலஞ்சம் கொடுத்தால், பட்டா மாற்றம் செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதனால் முதற்கட்டமாக ரூபாய் 500 ஐ,மூர்த்தி கொடுத்துள்ளார். பின்னர், தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறையில் மூர்த்தி புகார் செய்தார். அதன் பேரில் தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, ஆகியோர் தலைமையிலான போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் 2000தை மூர்த்தி இடம் கொடுத்து, அதனை கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் கொடுக்க செய்தனர்.

அதன்படி, இன்று பிற்பகல் கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் மூர்த்தி ரூ.2000 கொடுக்கும் போது, மறைந்து இருந்த போலீசார் , அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story