கெரகோடஅள்ளியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கெரகோடஹள்ளியில் கோடாரி தடுப்பூசி முகாமை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்பட்டு வருகிறது.
மழைக்காலத்தில் வைரஸ் தொற்று காரணமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது, கடந்த சில மாதங்களாக அடிலம், பந்தாரஅள்ளி, பெரியாம்பட்டி, கெரகோடஅள்ளி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து கால்நடை துறை சார்பில் கோமாரி தடுப்பூசி சிறப்பு முகாமினை கெரகோடஅள்ளி கிராமத்தில் முன்னாள் அமைச்சர், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.அன்பழகன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் மருத்துவர் சண்முகசுந்தரம், கால்நடை மருத்துவர்கள் திருப்பதி, பச்சை .சார்லஸ் மற்றும் முன்னாள் பால்வள கூட்டுறவு சங்க தலைவர் முருகன், திண்டல் கூட்டுறவு சங்க தலைவர் சின்னசாமி, இன்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் காசிராஜா, காளப்பன அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் பழனி(எ) செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் காவேரி, பெரியம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் சந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கனபதி, குமரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனி, விஸ்வநாதன், மகாலிங்கம், சங்கர், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவி, காரிமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் காந்தி, தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவங்கி துனைத் தலைவர் மாது மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu