பாலக்கோடு அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: இருவர் கைது

பைல் படம்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பொரத்தூர் கிராமத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச் செல்வனுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
தகவலில் பேரில் டி.எஸ்.பி தினகரன் மற்றும் பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில், ராஜா மனைவி கிருஷ்ணம்மாள் (வயது .35), அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன் நாகப்பன் (வயது .42) ஆகியோர் தன்னுடைய வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் தப்பியோடிய இருவரையும் விரட்டி சென்று பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா செடியை அழித்தனர். மேலும் போலீசார் பள்ளி, கல்லூரி, பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை தீவிர படுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu