பாலக்கோடு வட்டார வேளாண்மைத் துறை சார்பில் மண்வள அட்டை குறித்த பயிற்சி

பாலக்கோடு வட்டார வேளாண்மைத் துறை சார்பில் மண்வள அட்டை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார வேளாண்மை துறையின் கீழ் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் கொரவாண்ட அள்ளி கிராமத்தில் நேற்று வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா தலைமை தாங்கி மண்வள அட்டை குறித்த பயிற்சினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் சின்னார் அணை உப வடிநிலவிவசாயிகளுக்கு இடுப்பொருட்கள் வழங்கினார். பாவக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா மண்வள அட்டை இயக்கத்தின் நோக்கம் குறித்தும், மண்பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் பயிர்களுக்கு உரமிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், தேவைக்கேற்ப அங்கக மற்றும் இரசாயன உரங்களை உபயோகிக்க வழிவகை செய்வதனால் சாகுபடி செலவு குறைக்கப்படுவதுடன், அளவுக்கு அதிகமாக இரசாயன உரங்கள் மண்ணில் இடப்படுவதும் தவிர்க்கப்பட்டு மண்வளம் பாதுகாக்கப்படுகின்றது என்று விவசாயிகளுக்கு கூறினார்.

மண் பரிசோதனை நிலைய வேளார் மாய அலுவலர் எழில்முருகன் மண்வள அட்டையின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தின் பார்வளத்தினை அறிந்து கொள்ளவும், மண்ணில் ஏதேனும் பிர்ச்சினைகள் உள்ளதா என்பதை அறிந்து, சீர்திருத்த முறைகளை மேற்கொண்டு, அப்பிரச்சனைகளை நிவர்த்தி செய்ய இயலும் என்று விளக்கமளித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் பாலக்கோடு வேளாண்மை அலுவலர் அன்பரசு, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோவிந்தன், மாரிமுத்து, முருகன் மற்றும் அட்மா அலுவலர்கள் மகேஸ்வரி, கிருஸஷ்ணமூர்த்தி, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்ட அலுவலர் கவியரசு, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
ai marketing future