தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற பயிற்சி தேவை: விவசாயிகள் கோரிக்கை
பைல் படம்.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, சோமனஹள்ளி, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி வரத்து உயர்வு காரணமாக விலை கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை கிலோ 4 ரூபாய்க்கும் விற்பனையானது. சென்ற மாதம் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனையானது.
ஒரே மாதத்தில் தக்காளி வரத்து அதிகரித்து அதன் காரணமாக விலை குறைந்துள்ளது. இந்த விலை குறைவு தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாவும், தக்காளியில் ஊசிபுழு தாக்குதல் காரணமாக மகசூல் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் இதை கட்டுப்படுத்த விவசாயிகள் போராடி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளாதக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண் அதிகாரிகள் ஊசிபுழுவை கட்டுபடுத்தும் எந்தவழிமுறைகள் சொல்வதில்லை என குற்றச்சாட்டு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழக அரசு சார்பில் தக்காளி விலை குறைவு காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக தயாரித்து விற்பனை செய்ய வாகனம் ஒன்று கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது இந்த வாகனம் விவசாயிகளுக்கு பயன் இல்லாத வகையில் உள்ளது . இதுபோன்று தக்காளி விலை குறைவான காலங்களில் தக்காளியை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விவசாயிகள் விற்பனை செய்ய விற்பனை சந்தையை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu