பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் 200 டன் அளவிற்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பாலக்கோடு பகுதியில் நிலவும் சீதோசன நிலை காரணமாக திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில் மூலமாக காய்கறிகள், கீரை வகைகள், தக்காளி உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை பொழிவினால் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஅள்ளி ,பஞ்சப்பள்ளி, பெல்ரம்பட்டி, பொப்பிடி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது .

இந்த நிலையில் கர்நாடகா, கேரளா, ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கு காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வியாபாரிகள், அந்த பகுதிக்கு அதிக அளவில் அனுப்பி வருகின்றனர் . இதை அடுத்து தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் 5 ரூபாய்க்கு விற்ற தக்காளி தற்போது 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையும், 25 கிலோ கொண்ட கூடை 700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலையேற்றம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai and business intelligence