பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமி

பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமி
X
பாலக்கோடு அருகே பூட்டிய வீட்டில் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே கங்கபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் செக்கம்மா (வயது. 69). இவரது கணவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்; சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவர்களுக்கு 2மகன்கள்; ஒருவர் ஓசூரில் உதவி பொறியாளராகவும், மற்றொரு மகன் கிருஷ்ணகிரியில், போலீசாகவும் வேலை செய்து வருகின்றனர். எனவே, செக்கம்மா மட்டும் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 4ம் தேதி மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பிய செக்கம்மா, வீட்டின் ஜன்னல், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!