பாலக்கோடு அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொலை செய்த மகன்

பாலக்கோடு அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொலை செய்த மகன்
X
பாலக்கோடு அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொலை செய்த மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த எருதுகூடஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முனியப்பன் (வயது .75 ) இவருக்கு, 3 மகள்கள், ஒரு மகன் உள்ளார். இவரது மனைவி முனியம்மன், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இறந்ததால் மகள் நாகம்மாள் வீட்டில் வசித்து வந்தார். முனியப்பனுக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தில், மகள்களுக்கு சொத்தை பிரித்து கொடுக்க முயன்றுள்ளார். இதற்கு அவரது மகன் மாது (வயது.35) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதனையும் மீறி கடந்த வாரம் 1 ஏக்கர் நிலத்தை வேறு நபருக்கு விலை பேசி ஒரு இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாது நேற்று மதியம் வீட்டில் இருந்த தந்தை முனியப்பனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பிசென்றார். தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மாதுவை தேடி வருகின்றனர்.சொத்திற்காக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!