தந்தையின் சமாதி மீது விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட மகன்

தந்தையின் சமாதி மீது விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட மகன்
X

பைல் படம்.

கடன் சுமையால் தந்தையின் சமாதி மீது விஷம் அருந்தி மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வீராசனூரை சேர்ந்த அரவிந்தன்.24 இவரது தந்தை ரவி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். பிறகு அவரது குடும்பத்தினர் பெங்களூருவில் குடியேறினர்.

தந்தை பெற்ற கடன் தீராத நிலையில், நேற்று பெங்களூருவிலிருந்து வீராசனூருக்கு வந்த அரவிந்தன், அவரது தந்தை இறந்த சமாதியின் மீது விஷம் அருந்தி அவரும் தற்கொலை செய்துகொண்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலிசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது